Published
10 months agoon
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம். வயது பையன்கள் முதல் வயதானவர்கள் வரை இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியை வயது வித்தியாசமில்லாமல் ரசித்து வருகிறார்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உட்பட பல படங்களில் இது போல ஆடல் பாடல் நிகழ்ச்சி, ரிக்கார்டு டான்ஸ் நிகழ்ச்சியை பார்த்து ரசித்து இருப்பீர்கள்.
இந்த நிலையில் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் தவறான பாடல்கள் இடம்பெறுதல், விடிய விடிய நிகழ்ச்சி நடத்துதல் அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை காரணமாக வைத்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பல்வேறு ஊர்களில் இருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டன, இதை இன்று நீதிபதி தாரணி விசாரித்தார்.
அப்போது, கோயில் விழாக்களை வழக்கம் போல் நடத்திக் கொள்ளலாம். ஆனால் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது. ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கும் கோயில் விழாவுக்கும் என்ன தொடர்பு உள்ளது? இதற்கு செலவாகும் பணத்தை நீர் நிலைகளை தூர்வாருவதற்கு பயன்படுத்தலாம் என நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து பல மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.