Pawan Kalyan-TN CM
Pawan Kalyan-TN CM

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த தெலுங்கு பவர் ஸ்டார்

144 தடை, ஊரடங்கு உத்தரவால் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவாமல் தடுக்க இந்திய அரசு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்திய மக்களும் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தினமும் வேலை செய்து பிழைப்பவர்கள் அதுவும் அண்டை மாநிலத்தில் இருந்து வந்து தமிழக மாநிலத்திற்குள் தினக் கூலிகளாக வலம் வருபவர்கள் பலர்.

தெலுங்கு நடிகரும், ஜனசேனை கட்சியின் தலைவருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் ஒன்றை வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக தமிழக கடற்கரை எல்லைக்கு சென்ற 98 மீனவர்கள் 144 தடை ஊரடங்கு உத்தரவால் அவர்கள் சென்னை துறைமுகத்தில் சிக்கியுள்ளனர் என்றும், அந்த மீனவர்கள் தங்கும் வசதி இன்றியும் உணவு இன்றியும் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும், அவர்கள் குடும்பத்தினர் இதைக்குறித்து செய்வதறியாது தவித்து வருகின்றனர் என்றும், தன் சொந்த கட்சியான ஜனசேனை கட்சியின் தொண்டர்கள் மூலம் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும், எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் இந்த செய்தி தெரிந்த உடனேயே அந்த 98 மீனவர்களுக்கும் தங்கும் வசதி, உணவு வழங்கி அவர்களை பத்திரமாக தங்கள் ஊருக்கு அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீகாகுளம் ஜில்லா கலெக்டர் அவர்கள் அந்த 98 மீனவர்களைப் பற்றிய தகவல்களை அந்த மீனவ குடும்பங்களுக்கு தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.