டெடி பொம்மைக்கு குரல் கொடுத்தது யார்

27

டெடி படம் சமீபத்தில் வெளிவந்து பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டாவது வாரத்தை நெருங்கியுள்ள டெடி திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் சிறப்பானதொரு விசயமாக இருந்திருக்கும்.

இந்த படத்தில் நடித்துள்ள டெடி பொம்மைக்கு க்யூட்டான குரல் கொடுத்தது யார் என தெரிய வந்துள்ளது.

2000ம் ஆண்டு வெளியான டோராவுக்கு 5 வயதில் டப்பிங் செய்ய ஆரம்பித்த கேரளாவை சேர்ந்த நிம்மி ஹர்ஷன் 21 ஆண்டுகளாக டோராவுக்கு டப்பிங் செய்து வருகிறார். மேலும், வீர் தி ரோபோ, லிட்டில் சிங்கம் உள்ளிட்ட ஏகப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும் டப்பிங் செய்து வருகிறார் நிம்மி ஹர்ஷன். டெடி படத்திற்காக தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தான் டப்பிங் செய்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிம்மி ஹர்ஷன் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  டெடியுடன் போஸ் கொடுக்கும் ஆர்யா ரசிகர்கள்
Previous articleகும்பகோணம் ஆரணி தனி மாவட்டம் – தலைவர்கள் பேச்சு
Next articleசிறந்த திரைக்கதை என்றால் மணிவண்ணன் தான்