Tamil Flash News
மலர் டீச்சர் குறித்த கேள்விக்கு இயக்குனர் பிரேமம் இயக்குனர் பதில்
கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த பிரேமம் படம் சிறப்பானதொரு வெற்றியை பெற்றது. இப்படம் உருவாக்கம் குறித்து சமீபத்தில் இந்த பட இயக்குனர் அல்போன்ஸ்புத்திரன் பேஸ்புக்கில் உரையாடினார்.
இப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார்
இந்நிலையில், மலர் கேரக்டருக்கு நடந்த சம்பவம் தொடர்பாகவும் க்ளைமாக்ஸ் காட்சிகள் தொடர்பாகவும் ரசிகர் ஒருவர் கேட்டுள்ள கேள்வி உட்பட திரைப்பட உருவாக்கம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பேஸ்புக்கில் பதில் கூறியுள்ளார்.
அப்படி ஒரு ரசிகர் கேட்ட அந்த கேள்வியில், “ஒரு சந்தேகம் .. பிரேமத்தில் .. ஜார்ஜிடம் உண்மைகள் எதையும் சொல்ல விரும்பவில்லை என்று மலர் கடைசியாக சொல்கிறாள் .. அதை மூன்று முறை பார்த்த பிறகும் நாங்கள் குழப்பமடைகிறோம் .. மலருக்கு உண்மையில் நினைவுகள் இழப்பு ஏற்பட்டதா? அல்லது மலர் வேண்டுமென்றே ஜார்ஜை தவிர்க்க விரும்பினாளா? அல்லது சமீபத்தில் மலர் தன் நினைவைத் திரும்பப் பெற்றார், அதனால் மலர், திருமணம் செய்துகொண்டுள்ள ஜார்ஜிடம் பழைய உண்மைகளை சொல்ல விரும்பவில்லையா? இவற்றில் எது சரி? உங்கள் பதிலுக்காக எனது நண்பருடன் 100 ரூபாய் பந்தயம் கட்டியுள்ளேன்!” என கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த அல்போன்ஸ் புத்திரன், “மலர் நினைவை இழந்துவிட்டாள். அவள் பழைய நினைவு வந்ததும் அறிவழகனுடன் பேசியிருக்கலாம். உடனே அவனுடன் அங்கு சென்றதும் திருமண கோலத்தில் நிற்கும் ஜார்ஜ் செலினுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக மலர் உணர்கிறாள். ஆனால் அங்கு சூப்பராக, ஜார்ஜ் மலருக்கு மீண்டும் நினைவு வந்துவிட்டதை புரிந்துகொள்கிறாள். இது உரையாடல்களில் கூறப்படவில்லை. ஆனாலும் நான் இந்த நேரத்தில் வயலினுக்கு பதிலாக ஹார்மோனிகா இசையுடன் காட்சியில் காட்டியுள்ளேன். உங்கள் சந்தேகம் நீங்கும் என்று நம்புகிறேன். ஆக, இந்த பதில்.. உங்கள் கேள்விகளில் கடைசி கேள்வியாக உள்ளது. சமீபத்தில் மலர் நினைவை திரும்ப பெற்றாள் என்பதுதான்…” என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, பிரேமம் மலர் டீச்சர் குறித்து அப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் கூறியுள்ள இந்த பதில் வைரலாகி வருகிறது.