Latest News
பொதுமக்களோடு டீ சாப்பிட்ட உதயநிதி
தேர்தல் வந்துவிட்டாலே அரசியல் தலைவர்கள் பலர் எளிமையான மக்களோடு இருக்கிறோம் என்பதற்காக எல்லா மக்களுடனும் இறங்கி சென்று பழகுவார்கள் பாசமழையை பொழிவார்கள்.
நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி இன்று கரூர் பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்படி அவர் பிரச்சாரம் செய்கையில் கரூரில் உள்ள சாலையோர கடை ஒன்றில் அமர்ந்து பொதுமக்கள் சிலருடன் டீ சாப்பிட்டார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்-சேலம் பைபாஸில் உள்ள சாலையோர கடை ஒன்றில் பொதுமக்களோடு அமர்ந்து இன்று தேனீர் அருந்தினேன். தங்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளாலும், புன்னகையாலும் பகிர்ந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறிய பொதுமக்களுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்-சேலம் பைபாஸில் உள்ள சாலையோர கடை ஒன்றில் பொதுமக்களோடு அமர்ந்து இன்று தேனீர் அருந்தினேன். தங்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளாலும், புன்னகையாலும் பகிர்ந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து கூறிய பொதுமக்களுக்கு நன்றி. @V_Senthilbalaji pic.twitter.com/5PHgvWzatC
— Udhay (@Udhaystalin) February 9, 2022
