விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் பெண் அதிகாரி ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் மிரட்டியுள்ளார்.
விழுப்புரம் தாட்கோ அலுவலகத்தில் நேற்று நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவர் பெண் அதிகாரி ஒருவரை மட்டமாகவும் ஒருமையிலும் பேசியுள்ளார்
இந்த அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வரும் அன்புதேவகுமாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். விதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று நிராகரிக்கப்பட்ட மனு ஒன்றை ஏற்கச் சொல்லி கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை பிரமுகர் ஆத்திரத்தில் தகாத வார்த்தையாலும் ஒருமையிலும் திட்டியதோடு அந்த பெண் அதிகாரியை மிரட்டல் விடுத்தும் பேசியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வெளியாகியுள்ளது.