Corona (Covid-19)
டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கொரோனா கண்டறியும் குறைந்த விலை கருவி
கொரோனா அறிகுறிகள் பலருக்கும் தெரிவதே இல்லை என சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அறிகுறிகளை சொன்ன சுகாதாரத்துறை இப்போது கொரோனா அறிகுறிகளே தெரியாமலும் வருகிறது என கூறியுள்ளது.
இந்நிலையில் அரசு மருத்துவமனைகள், பிரைவேட் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை நாடாமல் நாமே கொரோனா சோதனை செய்து கொள்ள புதிய வகை கருவியை டாடா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்த கருவியை வர்த்தக ரீதியாக பயன்படுத்த தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
இக்கருவியின் விலை 500 ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.மரபணுக்களை மாற்றியமைத்து நோய்த்தொற்று பாதிப்பை கண்டறியும் தொழில்நுட்பம் இக்கருவியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.