செய்முறை
தக்காளி – 1/2 கிலோ
வெங்காயம் – 2
பூண்டு – 10 பற்கள்
நல்லெண்ணெய் – 4 tbsp
கடுகு , உளுத்தம் பருப்பு, சீரகம் – 1/2 tsp
கருவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் தூள் – 1 tbsp
கடாய் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து பொறிக்க விடுங்கள். அடுத்ததாக கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்குங்கள்.
பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்குங்கள். பின் தக்காளி, உப்பு , மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள்.
10 நிமிடங்கள் தட்டுபோட்டு மூடி மிதமான தீயில் வைக்கவும். திறந்து பார்க்க தக்காளி குழைய சுருங்கியிருக்கும். பின் நன்கு வதக்கிக் கொண்டே இருக்க தொக்கு கெட்டி பதம் வரும். அந்த சமயத்தில் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் தக்காளி தொக்கு தயார்.