Connect with us

சுவையான ரவா இட்லி செய்வது எப்படி

Latest News

சுவையான ரவா இட்லி செய்வது எப்படி

சுவையான ரவா இட்லி செய்வது எப்படி என இந்த பதிவில் பார்ப்போம்.

ஒரு கப் ரவை

முக்கால் கப்- கெட்டி தயிர்(புளிப்பு இல்லாதது)

உப்பு -தேவையான அளவு

பேக்கிங் சோடா- மிக சிறிதளவு

இப்போது நன்றாக அந்த கலவையை மிக்ஸ் செய்யவும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்  தேவைக்கு சேர்த்து மிக்ஸ் செய்யவும் அதிகம் தண்ணீர் சேர்த்துவிடக்கூடாது மாவு ஓரளவு கெட்டியாக இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். அரைமணி நேரம் மாவை ஊறவைக்க வேண்டும்.

பேன் ஒன்றை அடுப்பில் வைத்து பேன் சூடானதும் 1 ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். 1 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

எண்ணெய் சூடானதும் அரை ஸ்பூன் கடலைபருப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதே அளவு உளுந்தம்பருப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கடுகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் பொன்னிறமாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு இஞ்சியை சின்ன சின்னதாக வெட்டியதை அதில் போடவும்.

பிறகு பச்சை மிளகாயையும் சின்ன சின்னதாக வெட்டி அதில் போடவும்.

கருவேப்பிலையும் தேவையான அளவு அதில் போடவும். இப்போது மீண்டும் கொஞ்சம் லேசாக அனைத்தையும் வதக்கி கொள்ளவும். அடுப்பை மீடியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கொஞ்சம் முந்திரியை எடுத்து சின்னதாக உடைத்து அதில் சேர்த்துக்கொள்ளவும். அதையும் லேசாக வதக்கி கொள்ளவும்.

இப்போது மாவை எடுத்து பார்க்கவும் அதில் கேரட்டை துருவி சேர்த்துக்கொள்ளவும் . வதக்கிய கலவை அனைத்தையும் சேர்த்துக்கொள்ளவும். ஊறிய மாவு கொஞ்சம் கெட்டியாக இருந்தால் அதில் லேசாக தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பாருங்க:  யானை படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

இப்போது இட்லி பாத்திரத்தின் ஒவ்வொரு குழியிலும் லேசாக எண்ணெய் தேய்த்துக்கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்தால்தான் இட்லி ஒட்டாமல் வரும். கரைத்து வைத்திருக்கும் கலவையை எடுத்து இட்லியாக ஊற்றிக்கொள்ளுங்கள்.

பிறகு சரியாக 10 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும் நன்றாக வெந்து இருக்கும் ரவா இட்லி ரெடி.

 

 

Continue Reading
You may also like...

More in Latest News

To Top