தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளன.
இந்த தேர்தலின் முடிவுகள் வருகிற 23ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த முறையும் பாஜகவே அதிக இடங்களை பிடிக்கும் எனவும், மோடியே பிரதமாராவார் என பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் வெளியிட்டுள்ளன.அதேபோல், தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிகளின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வருகிற 23ம் தேதி அறிவிக்கப்படவுள்ளதால் அன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.