cinema news
தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அனுமதி
கொரோனா காரணமாக கடந்த 4 மாதத்திற்கு முன் பெரிய நிறுவனங்கள், கோவில்கள், மால்கள் எல்லாம் மூடப்பட்டபோது அவற்றோடு சேர்த்து தியேட்டரும் மூடப்பட்டது. நீண்ட நாட்களாக தியேட்டர்கள் மூடி இருக்கும் நிலையில் தியேட்டரை நம்பி வாழ்வாதாரம் செய்பவர்கள் மிகுந்த பாதிப்பில் உள்ளனர்.
தற்போது தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை முன்னிட்டு நாளை முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் 50 சதவீத இருக்கைகளுடன் தான் தியேட்டர் இயங்க வேண்டும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.