இந்தியாவின்  ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்! தமிழகத்தில்தான் அதிகம்!

இந்தியாவின்  ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்! தமிழகத்தில்தான் அதிகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களை ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் முதலாக இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இப்போது 13,000 ஐத் தாண்டியுள்ளது. செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களை ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக அறிவித்து அங்கே சிறப்புக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய அரசு அறிவித்துள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் தமிழகத்திலே அதிகம் உள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தின் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய மாவட்டங்களாக உள்ளன.