farmers imp notice
farmers imp notice

விவசாயிகளுக்கான முக்கிய செய்தி – அவசரகால தொலைபேசி எண்கள்

கொரொனா பீதி காரணமாக இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரொனா 144 தடையால், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பெரிய பெரிய மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விவசாய நிலங்களில் விலை பொருட்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. அதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கான அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் காலை 10 மணிமுதல் மாலை 6 மணிக்குள் 044-22253884, 22253883, 22253496, 9500091904 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமின்றி மாவட்ட வாரியாகவும் உதவி எண்களை அறிவித்துள்ளது.

districtwise farmers helpline numbers
districtwise farmers helpline numbers
districtwise farmers helpline numbers1
districtwise farmers helpline numbers1

அதனை தொடர்ந்து, காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குளிர்பதன கிடங்கு பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது, காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளிக்கப்படும் என்றும் தமிழ்க அரசு தெரிவித்துள்ளது.