Corona (Covid-19)
தமிழகத்தில், நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதியளித்த தமிழக அரசு!
தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி!
தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஆட்டோக்கள் இயங்க அனுமதி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி, கட்டுமானத் தொழிலாளர்கள் பணி தொடர அனுமதி என பல்வேறு தளர்வுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை, கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசு ஒரு சில கட்டுபாடுகளையும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது. 25 சதவீத தொழிலாளர்களை மட்டும் கொண்டு இயங்கலாம் என்றும், தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை என்றும், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்துயுள்ளது.