Corona (Covid-19)
சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி! ஆனால் சில நிபந்தனைகளுடன்!!
கொரொனா தொற்றால், ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை அடுத்து ஹிட்டடித்த பழைய படங்கள் முதல் புதுவரவுகள் வர அனைத்தும் ஒளிபரப்புகின்றது.
இந்நிலையில், தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கில் படிப்படியாக ஒரு சில தளர்வுகளை காணமுடிகின்றது. இதனையடுத்து, தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் சில நிபந்தனைகளை வழிவகுத்துள்ளது.
அதன்படி, நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்ததுள்ளது தமிழக அரசு. ஆனால், தடை செய்யப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது; ஊரக பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் போன்ற நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.