இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், இதனால் கொரொனா நோய் தொற்று மேலும் பரவாமல் தடுக்கவே முன்னச்சரிகையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிக்காலம் என்று பல்வேறு மாநில முதல்வர்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கவுள்ளதால், மக்களின் நலன் கருதி, பல்வேறு அத்தியவாசிய பொருட்கள் மக்களூக்கு கிடைக்க வழிவகை செய்துள்ளதான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, அத்தியவாசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் கிடைக்கவும் மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கு இரண்டாவது முறையாக நிதி வழங்கவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த அறிக்கையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாட்டிலுள்ள பேக்கரிகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை இயங்க அனுமதி அளித்துள்ளார்.
இறுதியாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் அப்பொழுதுதான் கொரொனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும் என்றும், மக்கள் அனைவரும் அரசின் அன்றாட அறிக்கைகளை ஏற்று அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், விழித்திருங்கள்! விலகி இருங்கள்! வீட்டில் இருங்கள்! என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
