தமிழக பட்ஜெட் 2019- 2020 – சிறப்பு அம்சங்கள்

320

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசின் 2019-2020ம் ஆண்டுக்கான் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களை பார்ப்போம்:

2018-2019 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய் பற்றாக்குறை ரூ.19,319 கோடி ரூபாயிலிருந்து 2019-2020 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 14,315 கோடி ரூபாயாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறைக்காக 28,757.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்காக 12,563.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்காக விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு.

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

குறிப்பாக, அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக, பழைய ஓய்வுதிய திட்டத்தை அமுல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளாது.

பாருங்க:  மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி- கண்காணிப்பில் மருத்துவர்கள்!