தமிழக பாஜக தலைவராக செயல்பட்ட முன்னாள் தலைவர் திருமதி. தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் தெலுங்கானா கவர்னராக கடந்த வருடம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சில தினங்கள் முன் சென்னை வந்த தெலுங்கானா கவர்னர் திருமதி தமிழிசை செளந்தர்ராஜன் முதல்வர் எடப்பாடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்ட டுவிட்
இன்று (06.12.2020) முகாம் அலுவலகத்தில் மாண்புமிகு தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தனது கணவருடன் நேரில் சந்தித்து, எனது தாயார் திருமதி.தவுசாயம்மாள் அவர்களின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

