தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுராக பதவியேற்றார் தமிழிசை….

191
Tamilisai soundararajan comment on bjp

தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சவுந்தராராஜன் பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த சில வருடங்களாக தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டாலும் ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என தொடர்ந்து முழங்கி வந்தவர். திடீரென அவர் தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டார். அங்கு ஆளுநராக பணிபுரிந்து வந்த நரசிம்மன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார்.

Tamilisai soundararjan

இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது போலீசாரின் அணிவகுப்பு தமிழிசை ஏற்றுக்கொண்டார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகம் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பிரேமலதா விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பாருங்க:  2019 அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!