தனித்து போட்டியிட தயார் – தமிழிசை சவுந்தரராஜன் சவால்

480

தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக தயாராக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேபோல், அதிமுக – பாஜக கூட்டணியும் ஏறக்குறைய முடிவாகி விட்டது. இந்த மாதம் மட்டும் 2 முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை “பாஜக கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும். திமுக – காங்கிரஸ் கூட்டணி அல்லாத கட்சிகளோடு இணைந்து செயல்பட உள்ளோம். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், பாஜகவும் தனித்துப் போட்டியிட தயாராக இருக்கிறது என தெரிவித்தார்.

பாருங்க:  அதிர வைக்கும் திகில் காட்சிகள் நிறைந்த ‘இருட்டு’ - டிரெய்லர் வீடியோ