Tamil Flash News
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம் – பரபரப்பு செய்தி
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்ட விவகாரம் தமிழக மற்றும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து வருபவர் தமிழிசை சவுந்தரராஜன். சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டாலும் ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என தொடர்ந்து முழங்கி வந்தவர்.
இந்நிலையில், தற்போது அவர் தெலுங்கானா மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஆளுநராக பணிபுரிந்து வந்த நரசிம்மன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.