சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துதுறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடைபெற்றது.
கொரோனா பாதித்த பகுதிகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஏப்ரல் 20க்கு பிறகு, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் மூலமாக புதிய செல்போன், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்டவற்றை இனி வாங்க இயலும் என்று உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்றும், 1.25 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும், முதற்கட்டமாக 24 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்படும் என்றும், விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளை யாரும் எந்த தடை விதிக்கக் கூடாது என்றும் – சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.