தீபாவளிக்கு என்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?

188

Tamil movie release update on Deepavali – இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது என்பது பற்றி பார்ப்போம்.

தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் அன்று வெளியாகும். இந்த வருட தீபாவளிக்கும் பல முக்கிய படங்கள் வெளியாகவுள்ளது. அதுபற்றி இங்கு காண்போம்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது கூடுதல் சிறப்பாகும். பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்டு மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இக்கதையில் விஜய் கால்பந்து போட்டி பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர் உள்ளிட பலரும் நடித்துள்ளனர்.

அடுத்து, விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விக்ரமை வைத்து ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் விஜய் சேதுபதி அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்துள்ள ‘கைதி’ திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜயின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  வாயால் இழந்த வாக்குவங்கி - மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் தேமுதிக

இதில், கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அதேபோல், சில சிறிய நடிகர்களின் திரைப்படங்களும் தீபாவளி ரிலீஸில் இனைய வாய்ப்புள்ளது.