Tamil Cinema News
தமன்னாவுக்கு வந்து போன கொரோனா- பயத்தின் உச்சத்துக்கு போன தமன்னா
தமிழில் பையா, தோழா,சுறா உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவராய் இருக்கிறார்.
சமீப மாதங்களில் எல்லோருக்கும் தொற்றிய பெருந்தொற்று கொரோனா தமன்னாவுக்கும் வந்தது. இப்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள தமன்னா கொரோனா வந்த நேரத்தில் பயத்தின் உச்சத்தில் இருந்தாராம்.
தான் இறந்து விடுவோம் என பயத்தில் இருந்ததாக கூறி இருக்கிறார் இவர். இருந்தும் டாக்டர்கள் தன்னை காப்பாற்றி விட்டதாக சந்தோஷப்பட்டுள்ளாராம் தமன்னா.
