Entertainment
இலங்கை தமிழர்களுக்காக டி.ராஜேந்தர் பாடியுள்ள பாடல்
இலங்கை தமிழர்கள் படும் பாடு சொல்லி மாளாது. பல வருடங்களாக தனி நாடு கேட்டு படாதபாடு பட்ட நிலையில், இலங்கை அரசால் சொந்த நாட்டு மக்களே பலர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த துயர நிலைகளை எல்லாம் மறந்து மக்கள் மாறி வரும் நிலையில்,கொரோனா போன்ற சூழல்களால் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அடிப்படை பொருட்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதும், அதை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருவதும், மறுபக்கம் எவ்வளவு கொடூரங்கள் நடந்தாலும் ஆட்சியை விட்டு போக மாட்டோம் என கடுமையான மக்கள் போராட்டத்திற்கு நடுவிலும் இலங்கை அதிபர் கோத்தபயே ராஜபக்சே அவரது சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இந்த துயரங்களை எதிர்த்து இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார் அந்த பாடல்கள் யூடியூபில் வெளியாகியுள்ளன.
