cinema news
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டி.ராஜேந்தர்- இன்று அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார்
தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி, என் தங்கை கல்யாணி, சாந்தி எனது சாந்தி, ஒரு வசந்த கீதம், தங்கைக்கோர் கீதம் என பல்வேறு படங்களை இயக்கியும், ஒரு தலை ராகம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியும் புகழ்பெற்றவர் டி.ராஜேந்தர்.
இவரின் இயக்கம் என்பதை விட இவரின் இசையமைப்பில் வந்த பாடல்கள் எல்லாம் செம ஹிட். 80களில் வந்த இவரின் பல பாடல்களை இசை ரசிகர்களால் மறக்க முடியாது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவின் தந்தையான இவருக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இருதயத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக கூறி இன்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட இருக்கிறார்.