Latest News
போதைப்பொருள் விற்பவர்களின் அசையும் அசையா சொத்து முடக்கம்
சமீபகாலமாக அளவுக்கு அதிகமான பாலியல் குற்றங்கள், சிறு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான குற்றங்கள் போதையிலேயே நடைபெறுவதால் போதைப்பொருள் விற்பவர்களை பிடிக்க டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையை முடுக்கி விட்டார்.
இதனால் அதிகமான குட்கா விற்பவர்கள், கஞ்சா விற்பவர்கள் பிடிபட்டனர்.
பல இடங்களில் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இருப்பினும் இவர்கள் இது போல் தொடர்ந்து செய்தால் இவர்களது சொத்துக்களான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் கடுமையான குற்றவாளிகள் திருந்தவில்லையென்றால் அவர்களின் வீடுகள் இடிக்கப்படுகிறது அது போல் இது போல் கொடூரர்களின் வீடுகளும் இடிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
