Entertainment
சுவையான லெஸ்ஸி செய்வது எப்படி
சுத்தமான தயிர்- உங்கள் தேவைக்கு
சீனி- உங்கள் தேவைக்கு
வெண்ணிலா எசன்ஸ்
வெண்ணெய்
ஐஸ்
தயிரை நன்றாக மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சிறிது ஐஸ் போட்டு நன்றாக அடித்துக்கொள்ளவும். அதனுடன் சீனியும் தேவைக்கேற்ப சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு டம்ளருக்கு மூன்று அல்லது நான்கு சொட்டு வெண்ணிலா எசன்ஸ் விட்டு கலக்கி கொள்ளவும்.
ஒரு டம்ளரில் அடித்த லெஸ்ஸியை ஊற்றும்போது அதில் லேசாக க்ரீம் ஆக உள்ள வெண்ணையை மேலே லேசாக சேர்த்து அப்படியே அருந்தலாம் சுவையாக இருக்கும்.
தேவை என்றால் மேலே பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவைகளை உடைத்து சேர்த்துக்கொள்ளவும்.
