Latest News
பணவரவு தொழில் வரவு பெருக- ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு முறைகள்
நமது வருமானத்தை அதிகப்படுத்தும்
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டக ஜெபம்!!!
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் செல்வ வளத்துடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் .
ஆனால் அதற்குரிய முயற்சியை தொடர்ந்து செய்வது கிடையாது.
அதனால் தான் இன்றைய காலகட்டத்தில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஒவ்வொருவரும் நாம் விரும்பும் அளவுக்கு மகத்தான செல்வ வளத்தை அடைய முடியும் .
பின்வரும் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவ பெருமானின் அருளைத தரும் பாடலை தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்கள் வீட்டில் ஜெபிக்க வேண்டும்.
தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.
நாலு முப்பது மணிக்குள் ஜெபம் செய்வதற்கு தயாராக வேண்டும்.
ஒரு புதிய விரிப்பு விரித்து அதன் மீது கிழக்கு நோக்கி அமரவேண்டும்.
வாசமுள்ள பத்தி பொருத்தவேண்டும்.
சந்தன வாசம் தரும் பத்தி ஆக இருந்தால் மிகவும் நன்று .
ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவர் போட்டோ முன்பாக
தாமரை தண்டு திரியில் நாட்டு பசு நெய் தீபம் ஏற்ற வேண்டும் .
அவல் பாயாசம் அல்லது வெல்லம் கலந்த தயிர்சாதம் தினமும் படையல் வைக்க வேண்டும். ஜபம் செய்து முடித்த பிறகு நாம் மற்றும் நமது வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அதை சாப்பிட வேண்டும்.
கீழேயுள்ள பாடலை தினமும் 33 முறை ஜெபித்து வரவேண்டும்.
ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக ஏதாவது ஒரு தெய்வத்தை தினமும் ஒரு மணிநேரம் ஜெபித்து வருபவர்களுக்கு தினமும் 33 முறை ஜெபம் செய்து வருவது சுலபமாக இருக்கும்.
புதிதாக ஜெபம் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு இது சிரமமாக இருக்கும்.
எனவே, புதிதாக ஜெபம் செய்ய ஆரம்பிப்பவர்கள் இன்று முதல் ,
முதல் ஒரு வாரத்திற்கு தினமும் 7 முறை ஜெபித்து வர வேண்டும் .
இரண்டாம் வாரத்தில் இருந்து தினமும் 14 முறை ஜெபித்து வர வேண்டும் .
மூன்று வாரத்தில் இருந்து தினமும் 21 முறை ஜெபித்து வர வேண்டும் .
நான்காவது வாரத்தில் இருந்து தினமும் 28 முறை ஜெபித்து வர வேண்டும்.
5 வாரம் முதல் 3 ஆண்டுகள் வரை தினமும் மூன்று முறை ஜெபித்து வர வேண்டும்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இவ்வாறு ஜெபித்து வர வேண்டும்.
இவ்வாறு மூன்று ஆண்டுகளில் உங்களுடைய வேலை அல்லது தொழில் மூலமாக படிப்படியான அதேசமயம் உறுதியான செல்வவளம் உங்களுக்கு வாழ்நாள் முழுக்க கிடைத்துக்கொண்டே இருக்கும் .
இந்த ஜெபம் ஆரம்பித்த நாள் முதல் 3 ஆண்டுகள் வரை கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது; மது அருந்தக் கூடாது; போதைப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது;
இவ்வாறு ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ணபைரவர் ஜெபம் செய்து வருவதை வெளிப்படையாக விவரிக்கும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் ;
இத்தனை சுய கட்டுப்பாடுகளை பின்பற்றினால் மட்டுமே செல்வவளம் கிடைக்கும்!!!
ஜபம் செய்து முடித்த பிறகு நெய் தீபத்தை அணைத்து வைக்க வேண்டும். ஜபம் செய்த விரிப்பை பத்திரமாக வைக்க வேண்டும் .அதை வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது. அதை துவைக்கக் கூடாது.
துர்க்கை சித்தர் ஐயா அவர்கள் நம்மீது கருணை கொண்டு இந்த சொர்ண பைரவர் அஷ்டகம் என்ற பாடலை நமக்காக இயற்றியுள்ளார்கள்.
சொர்ண பைரவர் அஷ்டகம்
தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்
நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
நிறைத்திடுவான் வான்மழை எனவே
வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட
பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
செய்யென்றான் பதரினைக் குவித்து
செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
தினமும் ஜெபம் செய்யும் பொழுது ஒரே ஒரு கிராம்பை வாய்க்குள் வைத்திருக்க வேண்டும்.ஜெபம் செய்து முடித்த பிறகு அந்த கிராம்பை துப்பி விட வேண்டும்.மரு நாள் புதிய கிராம்பை பயன்படுத்த வேண்டும்.
குழந்தை பிறந்த வீடுகளுக்கு குழந்தை பிறந்த அன்று என்று வந்தால் இரண்டு நாட்கள் இவ்வாறு ஜெபம் செய்வதற்கு விடுமுறை விட வேண்டும்.
நெருங்கிய உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற துக்கத்திற்கு அன்றைக்கே சென்றால் ஏழு நாட்கள் இவ்வாறு ஜெபம் செய்வதற்கு விடுமுறை விட வேண்டும்.
பெண்களும் ஜெபிக்கலாம்.
பெண்கள் மாதவிலக்கு நாட்களில் ஜெபிக்க கூடாது .
பின்குறிப்பு பலர் இந்தப் பாடலை ஆடியோ வடிவில் தினமும் கேட்டால் எங்களுக்கு வருமானம் அதிகரிக்குமா? என்று இதுவரை கேட்டுள்ளார்கள்.
நாம் ஜெபித்தால் மட்டுமே நம்முடைய மனதில் பதிவாகும்.
மனதில் பதிந்தால் தான் அது நம்முடைய கர்மவினையை குறைத்து
ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவரின் அருளைப் பெற்றுத்தரும்.
அவருடைய அருளால் நம்முடைய வருமானம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499