கடந்த 6மாத காலத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை போட்டு வாட்டி கொண்டிருக்கிறது. இன்னும் அது அழிந்து முழு கட்டுப்பாட்டிற்கு வரவில்லை. கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் பல கோவில்கள் மூடப்பட்டது.
140 வருடங்களுக்கு பின் திருப்பதி கோவிலும் மூடப்பட்டது 3மாத காலத்துக்கு பிறகு அனைத்து கோவில்களும் திறக்கப்பட்ட நிலையில் பல கோவில்களில் பூஜைகள் நடைபெற்று வந்தாலும் , கோவில்களில் நடக்கும் பல்வேறு விதமான விழாக்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது. இல்லை என்றால் விழாவில் மாற்றம் செய்து அதிக மக்கள் கூடாதாவாறு விழாக்களில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.
திருப்பதியில் புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்சவங்கள் ஒரு பக்கம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் நவராத்திரி தொடங்க இருக்கும் நிலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கும் சில கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி உற்சவர்கள் நான்கு மாட வீதியிலும் வழக்கமாக உலா வருவார்கள் இந்த வருடம் நான்கு மாட வீதியில் ஸ்வாமி உலா வராது என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.