சுஷாந்த் பெயரில் நிதி வசூல்- தங்கை எச்சரிக்கை

22

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஒரு படத்தின் மிகப்பெரிய புகழை அடைந்த இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு ஹிந்தி சினிமாவின் வாரிசு நடிகர்கள் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இவரது மரணம் இன்றும் மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில் சுஷாந்த் பெயரில் அவரது குடும்பத்துக்கு உதவி செய்யும் பொருட்டு நிதி உதவியை பலர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து

சுஷாந்தின் சகோதரி மீட்டு சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

”துரதிர்ஷ்டவசமாக, இந்த கரோனா சூழலில் சிலர் சுஷாந்த் மரணத்தைத் தங்களுடைய சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்தி வருவது எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நிச்சயமாக மனிதத் தன்மையற்ற செயல். அவ்வாறு செய்பவர்கள் அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

சுஷாந்த் பெயரில் நன்கொடை அல்லது நிதியைத் திரட்டுவதற்கு எங்கள் குடும்பம் யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதையும், சுஷாந்த் தொடர்பான எதையும் செய்ய யாருக்கும் நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் அனைவரது கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறோம்.என அவர் தெரிவித்துள்ளார்

பாருங்க:  ஏமாற்றிய காதலன் - புகார் வாங்க மறுத்த போலிஸ்; ஆசிரியைத் தற்கொலை!
Previous articleநினைவுகளை வெளிப்படுத்திய வெங்கட்பிரபு
Next articleஇவர் இரண்டாவது திருமணம் செய்கிறாரா