க/பெ ரணசிங்கத்துக்கு சூர்யா பாராட்டு- நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ்

க/பெ ரணசிங்கத்துக்கு சூர்யா பாராட்டு- நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ்

நேற்று முன் தினம் ஓடிடியில் க/பெ ரணசிங்கம் படம் வெளியானது. பலரால் இப்படம் பாராட்டப்பட்டு வருகிறது. பல விமர்சகர்கள் இப்படத்தை பாராட்டியுள்ளனர்.

இன்று இப்படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் இப்படத்தின் வெற்றியை மகிழ்ச்சி பொங்க கேக் வெட்டி கொண்டாடினார்.

அரியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஸ் சிறப்பானதொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் இப்படத்தை பாராட்டியுள்ளார்.

அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் #KaPaeRanasingam
இயக்குனர் விருமாண்டி, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகிய படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.என சூர்யா தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஸ், உங்களுடைய வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி

சார். உங்களது இந்தப் பாராட்டு எங்களுக்கு மகிழ்ச்சி, பலம் மற்றும் ஊக்கம் அளிக்கிறது! என கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் பதில் சிறந்த வார்த்தை… நன்றி என சூர்யாவுக்கு பதிலளித்துள்ளார்.