சூர்யா பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

18

இரண்டு நாட்களாக சமூக வலைதளம் முழுவதும் சூர்யா, சூர்யா என கிடக்கிறது. காரணம் சூர்யா நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என விடுத்த கோரிக்கைதான். அது மட்டுமல்லாது நீதிபதிகளை சூர்யா விமர்சனம் செய்ததும் சூர்யா மீதான விவாதத்தை சூடாக்கியது.

சூர்யா தைரியமானவர் என்று அவரின் ரசிகர்கள் , நலம் விரும்பிகள் கருத்து தெரிவித்தனர். அப்படி எல்லாம் கிடையாது என்று எதிர்தரப்பினரும் சூர்யாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யாவின் பேச்சுக்கு ஹெச்.ராஜா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பாஜக முக்கிய புள்ளிகள் பலர் கண்டனம் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் திருமதி வானதி சீனிவாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வசனம் பேசுவது போல மாணவர்களின் வாழ்க்கையில் நடிகர் சூர்யா விளையாட வேண்டாம் என வானதி சீனிவாசன் காட்டமாக கூறியுள்ளார்.

பாருங்க:  பட்டப்பகலில் பேருந்தில் வாலிபர் வெட்டிக்கொலை - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி