சூர்யாவின் பதிலடிக்கு ராதிகா பாராட்டு

சூர்யாவின் பதிலடிக்கு ராதிகா பாராட்டு

சூர்யா சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிய புதிய கருத்துகள் எதிர்கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில் சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒருவர் சூர்யாவை செருப்பால் அடிப்பவர்க்கு 1 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்த விசயத்தை அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மறுத்துள்ளார். விரைவில் சிவக்குமார் அவர்களையும் சூர்யாவையும் நேரில் சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் சூர்யாவும் என்னை செருப்பால் அடிப்பவர்க்கு 1 லட்சம் என்றால் அந்த வாய்ப்பை ஒரு ஒரு ஏழை மாணவனுக்கு வழங்க தயார் என கூறியுள்ளார்.

நடிகை ராதிகா உள்ளிட்டோர் சூர்யாவின் இந்த அறிக்கையை பாராட்டி வருகின்றனர்.