சூர்யா பாண்டிராஜ் புதுப்பட அப்டேட்

சூர்யா பாண்டிராஜ் புதுப்பட அப்டேட்

சூர்யாவின் தயாரிப்பில் ஏற்கனவே பாண்டிராஜ் படம் இயக்கி இருக்கிறார். பசங்க 2 என்ற அந்த திரைப்படத்தை சூர்யா தயாரித்து கெளரவ வேடத்தில் மட்டும் நடித்தார். அதற்குபின் சூர்யாவின் சகோதரர் கார்த்திதான் கடைக்குட்டி சிங்கம் என்ற பாண்டிராஜ் படத்தில் நடித்தார்.

இந்நிலையில், சூர்யாவின் 40-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார்.
மேலும், இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஜனவரியிலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்ட நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா-40 குறித்த புதிய தகவலை
பகிர்ந்துள்ளார்.