cinema news
இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாள்
1997ல் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. மூத்த நடிகர் சிவக்குமாரின் மகனாக இருந்தாலும் ஆரம்பத்தில் இவருக்கு நடிப்பு வரவில்லை என்று பரவலான பேச்சு இருந்தது. சூர்யா டான்ஸ் ஆடாமல் இருப்பது டான்சுக்கு நல்லது என்று பிரபல பத்திரிக்கை விமர்சனம் எழுதியது.
தொடர்ந்து தோல்வியிலேயே இருந்த சூர்யா திடீர் ஃபீனிக்ஸ் பறவையாக மாறி 2001ல் வந்த நந்தா திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு சூர்யாவில் சினிமா லைஃப் மாறியது.
பிதாமகன்,மெளனம் பேசியதே, அயன் , சூரரை போற்று புதிதாக நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் வரை சூர்யாவின் நடிப்பு எங்கேயோ போய்விட்டது என்று சொல்லலாம்.
இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் நாமும் அவரை வாழ்த்துவோம். வாழ்த்துக்கள் சூர்யா.