நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகரின் வாரிசாக இருந்தாலும், முன்னணி இயக்குனரின் படமான நேருக்கு நேரில் அறிமுகமாகி இருந்தாலும், சூர்யாவுக்கு என்று பெரிய அளவில் படங்கள் ஆரம்ப கட்டத்தில் வராமல் இருந்தது.
வந்தாலும் அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்படி இருந்த சூர்யாவை, இயக்குனர் பாலாதான் தனது நந்தா படத்தில் கதாநாயகன் ஆக்கியது மூலம் சூர்யா மார்க்கெட் சூடு பிடித்தது.
பிதாமகன் உள்ளிட்ட பாலா, சூர்யா கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் மிக பெரும் வெற்றி பெற்றது. இதனால் சூர்யா முன்னணி நடிகரானார்.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவை வைத்து பாலா புதிய படம் இயக்குகிறார், சூர்யாவே இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் ஷூட்டிங்கில் பாலாவிடம் கோபப்பட்டு சூர்யா வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.
சூர்யாவை பாலா கரடு முரடாக வேலை வாங்கியதாகவும் அதனால்தான் சூர்யா கோபப்பட்டு வந்தார் எனவும் கூறப்பட்ட நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சூர்யா இன்று ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார் அதில் மீண்டும் படப்பிடிப்புக்கு காத்திருக்கிறேன் என கூறியுள்ளார் சூர்யா.