Entertainment
சூர்யா மற்றும் இயக்குனர் பாலா படப்பிடிப்பு தளத்தில் மோதிக்கொண்டனரா?
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நந்தா. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சூர்யாவின் மார்க்கெட் வேல்யூ எகிறியது என சொல்லலாம் . சினிமாவில் நடிக்க வந்து பல வருடங்கள் கழித்து நந்தா படம்தான் திருப்புமுனை படமாக சூர்யாவுக்கு அமைந்தது.
அதன் பிறகு பாலா இயக்கத்தில் இவர் பிதாமகன் படத்தில் நடித்தார். அதன் பிறகு 18 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிக்க அந்த படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் முதல்கட்ட ஷெட்யூல்கள் கன்னியாகுமரியில் முடிவுற்றதாக கூறப்படும் நிலையில், நேற்று இறுதி நாளில் பாலாவுக்கும் சூர்யாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து 2டி எண்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜசேகரிடம் இது குறித்து கேட்டபோது, அப்படி எதுவும் இல்லை. படப்பிடிப்பு ரொம்பவே நல்லபடியாக நடந்து வருகிறது. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு 34 நாள்களுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து இரண்டாவது ஷெட்யூலை ஜூன் மாதத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். படக்குழு ஜூனில் கோவா செல்கிறது என்று தெரிவித்துள்ளார்.
