cinema news
சூர்யா அறிமுகப்படுத்திய வஸந்தின் பாராட்டு- சூர்யா நெகிழ்ச்சி
கடந்த 1997ல் வெளிவந்த நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. இந்த படத்தில் விஜய்யுடன் சூர்யா நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு மிகப்பெரும் நடிகராய் உருவெடுத்த சூர்யா, சமீபத்தில் வெளியான சூரரை போற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
பலரும் சூர்யாவை பாராட்டிய நிலையில் சூர்யாவின் குருநாதரான வஸந்தும் சூர்யாவை பாராட்டியுள்ளார்.
வணக்கம் இந்த கடிதம் சூர்யாவுக்கு இல்லை நெடுமாறனுக்கு, ப்ரேமுக்கு ப்ரேம் உன் ராஜ்ஜியம்தான் உயிரைகொடுத்து நடித்திருக்கிறாய். உன் அறிமுகம் என் மூலம் நடந்தது எனக்கு பெருமையே என தேர்ந்த மாணவரை ஆசிரியர் பாராட்டுவது போல சூர்யாவை இயக்குனர் வஸந்த் பாராட்டியுள்ளார்.
இதற்கு சூர்யாவும், நான் என்றுமே நீங்கள் விதைத்த விதை தான்..! ரொம்ப ரொம்ப நன்றி சார் என கூறியுள்ளார்.