சூர்யாவை பாராட்டிய கிரிக்கெட் வீரர் ரகானே

20

சூர்யா நடித்து கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படம் தியேட்டரில் வராமல் ஓடிடியில் வந்தே நல்ல அபிப்ராயம் பெற்றது. எல்லா ரசிகர்களிடமும் சென்றடைந்தது இப்படம்.

சாதாரண மனிதனும் மிகப்பெரிய விமான நிறுவனத்தை அமைக்கலாம் ஏழைகளும் விமானத்தில் குறைந்த செலவில் செல்லலாம் என்ற அடிப்படையில் இப்படம் வந்தது.

இப்படத்தை பலரும் பாராட்டிய நிலையில் கிரிக்கெட் வீரர் ரகானேவும் இப்படத்தை பாராட்டியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் அஷ்வின் இப்படத்தை ரகானேவுக்கு பரிந்துரைத்திருக்கிறார். இப்படத்தை பார்த்து விட்டு சூர்யாவை பாராட்டி தள்ளி இருக்கிறார் ரகானே.

அஷ்வினின் பரிந்துரையின் பேரில் மாஸ்டர் படத்தையும் பார்க்க இருக்கிறாராம் ரகானே.

பாருங்க:  கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு வாபஸ் வாங்கப்பட்டது