சூர்யாவின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வந்த திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி போன்றவர்கள் நடித்திருந்தனர்.இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க சுதா கொங்கரா இயக்கி இருந்தார்.
இந்த படம் அமேசானில் வெளிவந்தது.
இந்த படத்தில் சூர்யா விமான கம்பெனி அதிபராக என்ன என்ன பாடுபடுகிறார் என்ற விசயம் கதையாக சொல்லப்பட்டிருந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் என்ற பாடலை பார்த்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் சூர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்த பாடல் அழகாக ஆழமாக மென்மையாக மனதை தொடுகிறது என் கண்கள் குளமாகி விட்டன என அமிதாப் கூறியுள்ளார்.