cinema news
சூர்யா தயாரிப்பில் அக்ஷய்குமார் நடிக்கும் புதிய படம்
சூர்யா தயாரிப்பில் கடந்த 2020ல் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இருந்தார். விமானி கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளியாகிய இப்படம் தமிழில் தியேட்டரில் வந்திருந்தால் இன்னும் பிரமாண்டத்தை தொட்டிருக்கும்.
இருப்பினும் ஓடிடியில் வெளியாகியே அமோக வரவேற்பை பெற்றது. அமேசான் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியது.
இந்த படம் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு ஹிந்திக்கு செல்கிறது. ஹிந்தியில் இப்படத்தில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ் படத்தை தயாரித்த சூர்யாவே இப்படத்தை தயாரிக்கிறார் அவரின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த குழுவினர் அனைவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.