வெங்கட் பிரபு தாயார் மரணம்- மாநாடு பட தயாரிப்பாளர் இரங்கல்

37

பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் மனைவி திருமதி. மணிமேகலை நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். இவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் அம்மாவும் ஆவார்.

வெங்கட் பிரபு தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் மாநாடு படத்தை இயக்கி வருகிறார்.

வெங்கட் பிரபு அம்மா மறைவுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அம்மா நமக்கு எவ்வளவு பலம். பல நேரங்களில் அப்பாவுக்கும் நமக்கும் பாலம். உங்களுக்கு அம்மா எவ்வளவு பலம் என்பதறிவேன். உணர்வால் அம்மாவோடு மிகவும் பிணைக்கப்பட்டவர் என்பதை கடந்த ஒருவாரமாகப் பார்த்து வருகிறேன். எப்படியாவது மீண்டு மீண்டும் வந்துவிடுவார் என்று நம்பியிருந்தேன்.” என்று தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  நான்கு மாதக் குழந்தை கொரோனாவுக்கு பலி! சோகத்தில் மக்கள்!
Previous articleகொரோனா நிவாரணம்- சன் டிவி 30 கோடி நிதி உதவி
Next articleசுனைனாவுக்கு கொரொனா