Tamil Flash News
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – ஆப்பு வைத்த உச்ச நீதிமன்றம்
ஸ்டைர்லைட் நிறுவனத்தை திறக்க அனுமதியளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் 13 அப்பாவி மக்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை முட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்லவோ, தமிழக அரசாணையை எதிர்க்கவோ தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை எனத் தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலேயே நடத்தலாம் எனவும் தீர்ப்பளித்தது.