Tamil Flash News
தினகரனுக்கு குக்கர் சின்னம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிடிவி தினகரன் போட்டியிட்ட போது அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக டெபாசிட் வாங்கவில்லை. அதிமுகவும் தோல்வி அடைந்தது. டிடிவி தினகரன் மாபெரும் வெற்றி பெற்றார்.
குக்கர் சின்னத்திற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு உள்ளதால், அடுத்தடுத்த தேர்தல்களிலும் குக்கர் சின்னத்திலேயே அமுமுக கட்சி போட்டியிட வேண்டும் என தினகரன் கருதுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட போதும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல மேலும் அது ஒரு பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு கூறிய நீதிபதிகள் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் எதுவும் உத்தரவிட முடியாது எனக்கூறிவிட்டனர். மேலும் இது தொடர்பான வழக்கை 4 வாரத்திற்குள் முடிக்குமாறு உத்தரவிட்டனர்.