Latest News
உச்சநீதிமன்ற நீதிபதிக்கே கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்பு
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முஸ்லிம்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் ”கடந்த 17.03.2022 அன்று ஹிஜாப் சம்பந்தமாக மதுரையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய மாநில தணிக்கை குழு உறுப்பினர் ரஹமத்துல்லா இந்த நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அவர் நம் பாரத நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் வாகனத்தில் செல்லும்போது கொல்லப்பட்டால் அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் முழு பொறுப்பு என்றும் உணர்ச்சி பொங்க பேசினார். அவர் பேசியதற்கு பேரணியில் எழுப்பப்பட்ட கோஷங்கள் நீதிபதிகளையும், நீதித்துறையையும் மிரட்டும் வகையில் அமைந்திருந்தது.
அது மட்டுமன்றி சென்ற மாதம் நீதிபதியின் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று வந்ததையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம் என்று பேசினார். ஏதோ ஒரு முஸ்லிம் இளைஞன் இவ்வாறு பேசி விட்டான் எந்த எடுத்துக் கொள்ளலாம் என்றால், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் அவரது கருத்தை ஆதரிக்கும் விதமாக கோஷமிட்டுள்ளனர். இது அவருடைய தனிப்பட்ட கருத்து மட்டும் அல்ல, அங்கே இருந்த மொத்த முஸ்லிம்களின் கருத்தும் அதுதான் உறுதி செய்யும் வகையில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட வீடியோக்கள் வெளியாகின.
இந்திய திருநாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகளையே கொலை செய்வோம் என்று முஸ்லிம்கள் எச்சரிப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. நீதிபதிகளுக்கு விடுக்கப்பட்ட இத்தகைய மிரட்டலை முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த பெரியவர்களும், இயக்கங்களும் இதுவரை கண்டனம் கூட தெரிவிக்காதது அவர்களும் அதனை ஆதரிப்பது போல் அமைந்துள்ளது.
மேலும் நீதித்துறையின் மாண்பைக் காக்க வேண்டிய வழக்கறிஞர் பெருமக்களும் குறிப்பாக தமிழக வழக்கறிஞர்கள் யாரும் கூட இது குறித்து கண்டனம் தெரிவிக்காதது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
இம்மாதிரி நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இத்தகைய பயங்கரவாதிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அவர்கள் பின்புலம் கண்டறிவதோடு மட்டுமல்லாமல் அந்த அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.