Latest News
சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து- சுரேஷ் காமாட்சியின் மகிழ்ச்சி
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் மாநாடு. மிகுந்த சிரமங்களுக்கிடையில் இப்படம் வெளிவந்துள்ள நிலையில் இப்படம் குறித்து பலரும் பாராட்டி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் இப்படத்தை பாராட்டியுள்ளார்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுரேஷ் காமாட்சி, சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
நல்லதை தேடி பாராட்டும் மனசே உங்களை சிம்மாசனத்தில் வைத்துள்ளது. மிகுந்த பலம் பெற்றோம் ஒட்டும்மொத்த படக்குழு சார்பாக நன்றிகள் என ரஜினிக்கு நன்றி கூறியுள்ளார் சுரேஷ் காமாட்சி.
