cinema news
பாடலாசிரியர் வைரமுத்துவை தொடர்ந்து நம்ம சூப்பர் ஸ்டாரின் சூப்பர் அப்டேட்
இந்தியாவில் கொரொனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடம் தங்களால் முடிந்த நிதி உதவி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து, சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களால் முடிந்த நிதி உதவிகளை அளித்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் நடிகர் கமல்ஹாசனும் பார்த்திபனும் ஏற்கனவே தங்கள் இல்லங்களை கொரொனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அரசுக்கு தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்றையதினம் பாடலாசிரியர் வைரமுத்தும் தமக்குச் சொந்தமான திருமண மண்டபத்தை கொரொனா சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இவர்களை தொடர்ந்து, நம்ம சூப்பர் ஸ்டார்ரும் சூப்பர் அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளர். ரஜினிகாந்த்தும் தமக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரொனா சிகிச்சைக்காக அரசு விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.