Entertainment
இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள்
அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரஜினிகாந்த். அந்த படத்திற்கு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ரஜினி தொடர்ந்து வில்லனாகவே பல படங்களில் நடித்து வந்தார்.
பைரவி படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் பட்டம் அவரோடு இணைந்து கொண்டாது. குறைந்த நாட்களிலேயே அதாவது 8வருடங்களுக்குள்ளே அவர் 100வது படத்தை நெருங்கினார். 100வது படத்திலேயே தன் குரு மஹான் ராகவேந்திரர் வாழ்க்கை சரிதத்தில் நடித்தார் படம் பெரும் வெற்றி இல்லை என்றாலும் இவருக்கு நல்லதொரு பெயர் வாங்கி கொடுத்தது.
மனிதன், மாவீரன், மிஸ்டர் பாரத், நான் சிகப்பு மனிதன், ராஜாதி ராஜா, மாப்பிள்ளை,அதிசயப்பிறவி, பாட்ஷா, படையப்பா,முத்து, அருணாச்சலம் தற்போது வந்த அண்ணாத்தே வரை பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இவர்.
அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன ரஜினிகாந்த் திடீரென தன் முடிவை மாற்றிக்கொண்டு வரவில்லை என்று சொல்லிவிட்டார். இனி புதிய படங்களில் மட்டுமே நடிப்பார் என நம்புவோம். இன்னும் பல வெற்றிப்படங்களை கொடுப்பார் என இந்த பிறந்த நாளில் வாழ்த்துவோம்.
