cinema news
கிராமத்தினர் கொண்டாடிய சன்னிலியோன் பிறந்த நாள்- சன்னி லியோன் பரவசம்
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன். கவர்ச்சி பாம் என்று வர்ணிக்க கூடிய அளவு பாலிவுட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் அனைவரும் ரசிக்கும் நடிகையாக இவர் விளங்கி வருகிறார்.
இவருக்கு எக்கசக்கமான ரசிகர்கள் கூட்டம் இந்தியா முழுவதும் உண்டு. தென் மாநிலங்களில் ஏதாவது ஒரு விழாக்களில் இவர் வரும்போது ரசிகர்கள் இவரை மொய்த்து விடுவார்கள்.
சன்னி லியோன் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மற்றும் கும்மாளம்தான் அந்த மனநிலை ரசிகர்களுக்கு வந்து விடும். இந்த நிலையில் சன்னி லியோனின் ரசிகர்கள் சிலர் அவரின் சமீபத்திய பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்.
கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள கொம்மரஹள்ளி என்ற இடத்தில் தான் இத்தகைய நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் சன்னி லியோன் கட் அவுட்டுக்கு ஆளுயர மாலை போட்டும், ரத்த தான முகாம் நடத்தியும் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
இதை பார்த்து மகிழ்ந்த சன்னி லியோன், ரொம்பவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக டுவிட் செய்துள்ளார்.
Omg this is unbelievable.
In honor of you I will also go and donate my blood!!Thank you so much! You all really make me feel so special! Love you! pic.twitter.com/KeZNgaXxQf
— Sunny Leone (@SunnyLeone) May 15, 2022